Click here to download font
èù¾ ªñò¢ð¢ðì «õí¢´ñ¢
¸¬öõ£ò¤ô¢ Þ¬÷òó¢ ó ñ¤ù¢ùë¢êô¢ ê¤Áõó¢ õ£ö¢î¢¶è÷¢
 ªêò¢î¤è÷¢
 õ£ó Þîö¢
 ²ü£î£ ðè¢èñ¢
   w ðî¤ô¢è÷¢

   w æó¤¼ âí¢íé¢è÷¢

 õ£ó ó£ê¤ðôù¢¢
 ê¤øð¢¹è¢ è좴¬óè÷¢
 ê¤øð¢ð¤îö¢è÷¢
 àé¢è÷¢ è¼î¢¶
 Üñ¢ðôñ¢ ðø¢ø¤

 For help to view in Tamil...

²ü£î£ ðè¢èñ¢

 

எழுத்தாளர் சுஜாதா அம்பலத்தில் எழுதிய சாவி பற்றிய கட்டுரை

சாவியுடன் என் நட்பு சுமார் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்தது.

குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய மூத்த மகள் கல்யாணத்துக்கு அழைப்பில்லாமல் சென்றிருந்தேன். மதுரை சோமு கச்சேரி நடந்துகொண்டிருந்தது. நண்பர் ஒருவர் "இந்தப் பையன், 'சுஜாதா'ங்கற பேர்ல குமுதத்தில எழுதறான்" என்று அறிமுகம் செய்த உடனே, ரிஸப்ஷன் மாப்பிள்ளையை விட்டுவிட்டு என்னைப் பிடித்துக் கொண்டார்.

" நல்லா எழுதறீங்க. தினமணி கதிருக்கும் எழுதுங்களேன்" என்றார்.

"எழுதறேன் ஸார், எப்ப வேணும்" என்றேன்.

"நாளைக்கே ஆபீசுக்கு ஒரு சிறுகதை கொண்டு வாருங்களேன்'' என்றார்.

அப்போதெல்லாம் ஆரம்ப எழுத்தாளர்களிடம் ஆசிரியர்கள் இந்த ரேஞ்சுக்குப் பேசமாட்டார்கள். ஆசிரியர்களை அணுகுவதே கஷ்டமாக இருக்கும். இடையே ஏகப்பட்ட உபதெய்வங்கள் இருக்கும். சாவி அவ்வளவு சரளமாக இருப்பதை வியந்து, இரவோடு இரவாக 'அமோனியம் பாஸ்பேட்' என்ற ஒரு கதை எழுதி, மவுண்ட ரோடில் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருந்த அவரது அலுவலகத்துக்கு கொண்டு சென்றேன். அங்கே விந்தன்,
வை. சுப்ரமண்யன், ஓவியர் தாமரை போன்றவரைச் சந்தித்த ஞாபகம் இருக்கிறது. ஓரத்தில் ஒரு சிறிய அறையில் சாவி உட்கார்ந்திருந்தார். தினமணி கதிரை மறுபடி துவக்கி லட்சம் பிரதிகளை ஒரு மாதத்திலேயே எட்டியிருந்தார். என் கதையை வாங்கிய உடனே கம்போசிங்குக்கு அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியைக் காண...


w ²ü£î£ ðî¤ô¢è÷¢
w  â¿î¢î£÷ó¢ ²ü£î£ ñ¬ø¾
w  è¬ìê¤ è®îñ¢

Back